Pearl Millet - நாட்டு கம்பு
நாட்டு கம்பு : ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் நம்முடைய உடலில் உள்ள செல்லுலார் மட்டத்தில் உடலுக்கு சேதத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி பல நோய்கள் மற்றும் உடல்நலக் கோளாறுகளைப் போக்க உதவுகிறது. கம்பில் அதிக அளவிலான ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் இருப்பதால் அதை தினசரி உணவில் சேர்த்துக்...
நாட்டு கம்பு : ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் நம்முடைய உடலில் உள்ள செல்லுலார் மட்டத்தில் உடலுக்கு சேதத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி பல நோய்கள் மற்றும் உடல்நலக் கோளாறுகளைப் போக்க உதவுகிறது.
கம்பில் அதிக அளவிலான ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் இருப்பதால் அதை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் புற்றுநோய், மூட்டுவலி, இருதய நோய், நீரிழிவு மற்றும் அல்சைமர் நோய் போன்ற ஃப்ரீ ரேடிக்கலால் ஏற்படும் நோய்களை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவுகிறது. ஆறு மாத குழந்தைகளில் இருந்து குழந்தைகளுக்கு தானியங்களைக் கொடுக்க ஆரம்பிப்பார்கள்.
அப்போதிருந்தே கம்பை குழந்தைகளுக்கு உணவாகக் கொடுக்கச் சிறந்தது. கம்பு மாவில் கஞ்சி செய்து ஊட்டி வருவதன் மூலம் குழந்தைகளின் உடலுக்கு வலுவும் கிடைக்கும். நல்ல நோயெதிர்ப்புத் திறனுடனும் இருப்பார்கள். கம்பில் உள்ள வைட்டமின் பி மன அமைதியை உண்டாக்கி தூக்கத்தை உண்டாக்கும் ஹார்மோன்களின் சுரப்பைத் தூண்டும். இதனால் இன்சோம்னியா என்னும் தூக்கமின்மை பிரச்சினையைச் சரிசெய்து தூக்கத்தை மேம்படுத்தும்.
இதற்கு இரவு அல்லது காலை நேரத்தில் கம்பு மாவில் அடை அல்லது கஞ்சி செய்து சாப்பிடலாம். இது வயிறு நிரம்பிய உணர்வையும் தரும். நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். கம்பில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இது உடலின் செரிமானத்தை எளிதாக்கி மலச்சிக்கலைப் போக்குகிறது.
குறிப்பாக குழந்தைகள் அடிக்கடி மலச்சிக்கலால் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு தினமும் 2 ஸ்பூன் அளவுக்கு கம்பை ஊறவைத்து மென்று சாப்பிடக் கொடுக்கலாம் அல்லது கஞ்சியாக செய்து கொடுக்கலாம். கம்பில் உள்ள சில மூலக்கூறுகள் வயிற்றில் உண்டாகும் பித்த அமிலங்களின் சுரப்பைக் குறைத்து பித்தப்பை கல் உருவாகும் அபாயத்தை குறைக்கும். நீண்ட நாட்களாக இருக்கும் மலச்சிக்கல் பிரச்சினை தீரும்.
கம்பில் ஃபைடிக் அமிலம் எனப்படும் வேதிப்பொருள் இருக்கிறது. இது வளர்சிதை மாற்றத்தின் வேகத்தை அதிகரிக்கச் செய்து கொலஸ்ட்ராலைக் கரைக்கும் வேலையைச் செய்கிறது. அதோடு இதிலுள்ள வைட்டமின் பி வகையான நியாசினும் உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற கொலஸ்டிராலைக் குறைக்க உதவும்.
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் தேங்கியிருக்கும் கொலஸ்டிராலைக் குறைத்து இதய நோய் ஆபத்தைக் குறைக்க கம்பு உதவுகிறது. அதிக நார்ச்சத்துக்கள் கொண்ட தானியங்களை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் அது ஜீரணமாகி சிறுகுடலுக்குச் செல்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.
அதனால் நீண்ட நேரம் பசியெடுக்காமல் திருப்தியான உணர்வுடன் வைத்திருக்கச் செய்யும். நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வுடன் இருப்பதால் அதிக கலோரிகள் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க முடியும். அடுத்த வேளை உணவிலும் கலோரிகள் குறைவாக எடுத்துக் கொள்ள முடியும். இதனால் உடலில் உள்ள தேவையற்ற கலோரிகள் குறைந்து உடல் எடையையும் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
கொழுப்புகள் குறைந்து எடை வேகமாகக் குறைய ஆரம்பிக்கும். நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க கம்பை தினசரி டயட்டில் சேர்த்துக் கொள்வது நல்லது. கம்பில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் உள்ளது. இது செரிமானத்தை நிதானமாக்கி குளுக்கோஸை மெதுவாக இரத்தத்தில் வெளியிடச் செய்கிறது.
இதனால் அடிக்கடி கம்பை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நீண்ட நாட்களுக்கு ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுக்குள்ளேயே வைத்திருக்க முடியும். உடலில் உண்டாகும் இரும்புச்சத்து பற்றாக்குறையின் காரணமாக அனீமியா என்னும் ரத்த சோகை பிரச்சினை உண்டாகிறது.
இரத்த சோகை ஏற்படும் போது ரத்த சிவப்பணுக்களும் அதிலுள்ள ரத்த தட்டுக்களின் அடர்த்தியும் குறைய ஆரம்பிக்கும். இந்த ரத்த சோகையை சரிசெய்ய கம்பை நம்முடைய உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது. கம்பில் அதிக அளவில் இரும்புச்சத்து நிறைந்திருக்கிறது. அதனால் இது ரத்தசோகை வராமல் தடுக்கும்.
| Weight / Sizes | 500g, 1Kg |
|---|---|
| Category | MIllETS |
| Origin | Tamil Nadu, India (Organic Cultivation) |
There are no reviews yet for this product.
Be the first to review Pearl Millet - நாட்டு கம்பு.







