{"product_id":"dry-ginger","title":"Dry Ginger - சுக்கு","description":"\u003cstrong\u003eசுக்கு :\u003c\/strong\u003e\n\n\u003cstrong\u003eஇஞ்சியை பக்குவம் செய்து கிடைப்பது 'சுக்கு'. அறுவடை செய்த இஞ்சியை ஒருநாள் முழுதும் நீரில் ஊற வைத்து, மூங்கில் குச்சிகளைக் கொண்டு, இஞ்சியின் மேல் தோலை நீக்கி, பின்னர் ஒருவாரம் சூரிய ஒளியில் நன்கு காயவைத்துக் கிடைப்பதுதான் சுக்கு.\u003c\/strong\u003e\n\n\u003cdiv\u003eபித்தம் அகற்றும். வாயுத்தொல்லையை வேரறுக்கும். அஜீரணத்தைப் போக்கும். வலி அகற்றி, மாந்தம் மாய்க்கும். மலக்குடல் கிருமிகளை அழிக்கும். சளியைக்  குணப்படுத்தும். மூட்டுவலியை மொத்தமாய் ஓட்டும். வாதமகற்றி.\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003e\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003eசுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி  முற்றிலும் குணமாகும்.\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003e\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003e\n\n\u003cdiv\u003eசுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003e\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003eசுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003e\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003eசிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003e\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003eசுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003e\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003eசுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003e\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003eசுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, “சுக்கு நீர்” காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003e\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003eசுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.\u003c\/div\u003e\n\n\u003c\/div\u003e","brand":"Iyarkaikudil","offers":[{"title":"200g","offer_id":47098076070060,"sku":null,"price":180.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"100g","offer_id":47098076102828,"sku":null,"price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0774\/3235\/7036\/files\/DryGinger_Bowl.jpg?v=1788153109","url":"https:\/\/iyarkaikudil.com\/products\/dry-ginger","provider":"Iyarkai Kudil","version":"1.0","type":"link"}